மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - நலம் பெற ராமதாஸ் வாழ்த்து!!

 
pmk

முதல்வர் ஸ்டாலின் நலம் பெற ராமதாஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே 2 நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை , கண்காணிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

stalin
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  முதலமைச்சர் விரைவில் முழுமையாக நலம் பெற்று பணிகளை கவனிக்க வேண்டும்  என்று விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸும்  தொற்றால்  பாதிக்கப்பட்டு தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.