கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட பணிகளை  தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கும்  அடிக்கல் நாட்டினார். அதன்படி, வீனஸ் நகரில் புதியதாக கட்டப்பட்ட 7.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் விடுதியை திறந்து வைத்தார்.  வீனஸ் நகரில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மூலம் 19.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கட்டமைப்பு பணியை துவங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலின்

வீனஸ் நகரில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் மூலம் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாயை ஜம்புலிங்கம் தெருவில் இருந்து குமரப்பா சாலை வரை புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதேபோல் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ. 8.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 37 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  

ஸ்டாலின் விளையாட்டு

கொளத்தூர் பந்தர் கார்டன்,சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.  கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் 1.27 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கபட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது அங்கிருந்த விளையாட்டு வீரர்களுடன் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்..