இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

 
mk stalin

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி செல்கிறார்.

stalin

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு விழாக்களில் இன்று பங்கேற்பதற்காக தனி விமான மூலம் திருச்சி செல்கிறார் . திருச்சி செல்லும் முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.  சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி செல்லும் முதல்வர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இங்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல் , புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட புதிய பணிகளை தொடங்கி வைக்கிறார். அத்துடன் மணப்பாறை முண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலக தரம் வாய்ந்த வன்மரக்குழு ஆலையை முதல்வர் திறந்து வைக்கிறார்.

mk stalin

மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் நிர்வாக அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் முதல்வர்,  சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.  இதன் பிறகு தனி விமான மூலம் மீண்டும் முதல்வர்  மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.