சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

 
இந்து சமய அறநிலையத்துறை

சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களின் சொந்த நிதியில் பரமாரிக்கப்படுகிறதா ? என சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை ஒருங்கிணைப்பு குழுவினர் ஆய்வு - கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம்! | nakkheeran

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் சபாநாயகர் கோயில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வரபெற்றதால், நிர்வாகம் தொடர்பாக கோயிலை ஆய்வு மேற்கொள்ள ஆய்வுக் குழு வந்தபோது கோயில் நிர்வாகம் சார்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை.

சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களின் சொந்த நிதியில் பரமாரிக்கப்படுகிறதா ? தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து சிதம்பரம் கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுகிறதா ? பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளின் வரவு செலவு கணக்குகள், திருக்கோயில் நிலத்தின் உரிமை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேற்கண்ட விவரங்களை வரும் 15 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின், மேற்கண்ட நிலம் மன்னர்கள் அல்லது அரசால் இறைவனுக்கு வழஙப்பட்டதா? அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வழங்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.