செஸ் ஒலிம்பியாட்- 4வது சுற்றில் இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வி; 4 போட்டிகளில் வெற்றி

 
ChessOlympiad

44-வது செஸ் ஒலிம்பிட் போட்டியானது தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது இதில் இந்தியா சார்பாக ஆறு அணிகள் பங்கேற்கின்றன பொது பிரிவில் மூன்று அணிகளும் மகளிர் பிரிவில் மூன்று நீங்கள் என மொத்தம் 30 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் களம் இறங்கியுள்ளது இந்தியா.

இன்றைய தினம்  நான்காவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளுக்கும் கலந்து கொண்டனர் குறிப்பாக இந்தியா சார்பாக ஆறு அணிகளும் 24 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கடந்த மூன்று சுற்றுகளில் இந்திய அணி வெகு சிறப்பாக விளையாடி, பொது பிரிவில் உள்ள பி அணியானது புள்ளி பட்டியலில் முதல் இடம்பெற்று இருந்தது. தற்போது 4 வது சுற்றில் இந்தியா அணியும் பிரான்ஸ் அணியும் 2-2 புள்ளி பெற்று சமநிலை பெற்றது. இந்திய ஓபன்  பி அணி, இத்தாலியுடன் களம் கண்டது. இதில் 
இத்தாலி அணியை விட இந்திய அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய ஓபன் சி அணி, ஸ்பெயினுடன் களமிறங்கியது. இதில் இந்திய அணியானது ஸ்பெயின் அணியுடன் 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது. 


இந்திய மகளிர் அணி ஏ ஹங்கேரியுடன் மோதியது. இதில் இந்திய அணியானது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹங்கீகரி அணியை விட 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது இதேபோல் இந்திய மகளிர் அணி பி, எஸ்டோனியாவுடன் களம் கண்டது. அதில் இந்திய அணியானது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்டோனியா அணியை விட 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி சி பிரிவு ஜார்ஜியாவுடன் களமிறங்கியது. இதில்  ஜார்ஜியா அணியிடம் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.