சென்னை முழுவதும் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..

 
சென்னை முழுவதும் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..


நாளை நடைபெறவுள்ள ஜெஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, சென்னை நகர் முழுவதும் வலம் வந்தது.  

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.   இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி  வைக்கவுள்ளார்.  செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனது.  இதில் தமிழக ஆள்உநர் ஆர்.என்.ரவி,  முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.   இந்நிலையில் கடந்த 19-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.  

சென்னை முழுவதும் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..

இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி , நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.  நாடு முழுவதும் பயணித்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி,   நேற்று முன் தினம் (ஜூலை 25)  தமிழகம் வந்தடைந்தது.   புதுச்சேரி வழியாக கோவை பந்தய சாலைக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றடைந்தது. அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்ந்து  சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் , திருவள்ளூர் வழியாக இன்று காலை  மாமல்லபுரம்  வந்தடைந்தது. இதனை பெற்றுகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிம்பியாட் ஜோதியை போட்டி நடைபெறும் போர் பாயிண்ட்ஸ் அரங்கத்திற்கு கொண்டு செல்லும் வீரரிடம் வழங்கினார்.

சென்னை முழுவதும் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..

பின்னர் சென்னை கொண்டு வரப்பட்ட  ஒலிம்பியாட் ஜோதிyஐ,   மாநில கல்லூரி மைதானத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் நோக்கி ஜோதி ஓட்டம் தொடங்கியது. கிராண்ட் மாஸ்டர் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் ஊர்வலமாக  ஏந்திச் சென்றார்.  இந்த ஊர்வலத்தின்போது  கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த  ஒலிம்பியாட் ஜோதி நேரு ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைக்கு  கொண்டு செல்லப்பட்டு,  நாளை நடைபெறும் தொடக்க விழாவின்போது  ஜோதி ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.