செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வருகை - மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு!!

 
tn

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடைபெற உள்ள மாமல்லபுரத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தடைந்தது.

சர்வதேச செஸ்  ஒலிம்பியாட் போட்டிகள் நாளை  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  188 நாடுகளைச் சேர்ந்த 2500 வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.  பிரம்மாண்டமாக நடைபெறும் இப்போட்டிக்கு அரங்கங்கள் தயார் நிலையில் உள்ளன.  செஸ் போட்டிக்காக தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தம்பி சிலைகள்,  இலட்சினை மற்றும் செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் காய்களின் சிற்பங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை  இப்போட்டியை  தொடங்கி வைக்கிறார். 

tn

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரச்சாரத்துக்காக கடந்த ஜூன் 19ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிகள் தொடங்கி வைக்கப்பட்ட ஜோதி ஓட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயணித்தது. இந்த சூழலில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதி நெல்லை, மதுரை என வலம்வந்தது.

tn

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது.இந்தியாவில் 75 நகரங்களை கடந்து மாமல்லபுரம் வந்தடைந்தது . செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும்  அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். டெல்லியில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. 40 நாட்கள் பயணமாக 74 நகரங்களைக் கடந்து மாமல்லபுரம் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளம் முழங்க அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.