செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது

 
Jothi

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது.

தமிழகத்தில் சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டியை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இதில் 188 நாடுகளில் இருந்து 2000 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஸ்வநாதன் ஆன்ந்த் வழங்கினார்.அதனை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட மூன்று பேர் ஜோதியை ஏற்றினார்.