செஸ் ஒலிம்பியாட் : முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா..

 
செஸ் ஒலிம்பியாட் : முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா..

சென்னையில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின், முதல் சுற்றில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.  

44வது செஸ் ஒலிம்பியாட் : முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது..

சென்னை  மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெற்றது.  பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியானது  இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.  இதில் இந்திய அணியின் ஓபன் பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் இந்திய வீரர் ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் ரகுமானுடன் மோதினார்.  இந்த ஆட்டத்தின் 36வது நகர்வில் சத்வானி , ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றியை தன் வசமாக்கினார்.  

செஸ் ஒலிம்பியாட் : முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா..

இதன்மூலம், இன்று தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்திருக்கிறது.   வெற்றிக்குப் பிறகு  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்வானி, “இதுதான் எனக்கு முதல் ஒலிம்பியாட் போட்டி. எனது பயிற்சியாளருக்கு நன்றி. அவர் சிறந்த பயிற்சியாளர். அனைத்து அணிகளையும் ஒரே போன்று தான் நினைக்க வேண்டும். புதிய யுக்திகளை இந்த ஆட்டத்தில் கையாண்டேன். முதல் சுற்றில் வெற்றி பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.