செஸ் ஒலிம்பியாட் - இந்திய அணிக்கு கருப்பு காய்கள்

 
chess olympiad

செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து தொல்காப்பியம் ஆங்கில மொழியாக்கப் புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.

இதனிடையே மகளிர் பிரிவில் அதிக புள்ளிகளை கொண்ட இந்திய மகளிர் அணி கருப்பு காய்களுடன் போட்டியை தொடங்கும். ஓபன் பிரிவில் அதிக புள்ளிகளைக் கொண்ட அமெரிக்க அணி கருப்பு காய்களுடன் போட்டியை தொடங்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.