செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 - டிக்கெட் விற்பனை தொடங்கியது!!

 
tn

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அறிவிப்பை செஸ் கூட்டமைப்பு வெளியிட்டது

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.  இதன் காரணமாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

tn

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது . tickets.aicf.in என்ற இணையதளத்தில் ஒலிம்பியாட் தொடருக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 19 வயதுக்குட்பட்டோர், மகளிர், அரசு ஊழியர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

tn

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் ரூ.200, ரூ.300, ரூ.2,000, ரூ.3,000, ரூ.6,000, ரூ.8,000 என்று விற்பனை செய்யப்படுகிறது.  2 மணி நேரம் மட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண ரூ.200, ஒரு நாள் முழுவதும் காண ரூ.2,000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.