44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் - மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது!!

 
ttn

இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.  செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில் இன்று முதல் மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.

chess

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் போட்டிகள் இன்று முதல் தொடங்கி வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 187 நாடுகளை சேர்ந்த 188 அணிகள் ஓபன் பிரிவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  செஸ் ஒலிம்பியாட்  விளையாட்டு போட்டியில் இருந்து திடீரென பாகிஸ்தான் விலகியுள்ளது. இதன் மூலம் 186 நாடுகளைச் சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளதால் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியாவின் கனவுப் போட்டியாக பார்க்கப்படும் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று, பெரும் எதிர்பார்ப்புடன் மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் சார்பாக பிரக்யானந்தா,  வைஷாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகரன், நாராயணன், குகேஷ் , கார்த்திகேயன் முரளி,  சேதுராமன் ஆகிய 8 தமிழ்நாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.