மாம்பலம் பிரதான சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் - சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..

 
 போக்குவரத்தில் மாற்றம்


மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மாம்பலம் பிரதான சாலை (கோடம்பாக்கம் மெட்ரோ ஸ்டேசன்)  மெட்ரோ ரயில்  நிர்வாகத்தால் (CHENNAI METRO RAIL LIMITED)  மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளுக்காக  போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த  மாதம் 25ம் தேதி  முதல் ஒரு வாரகாலத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  

மெட்ரோ ரெயில் பணி:  போக்குவரத்தில் மாற்றம்

இந்த  ஓட்டம் நன்கு செயல்பட்டதால்,  மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கோரிக்கையின் படி,  இந்த போக்குவரத்து மாற்றங்கள் நாளை  (  09.01.2023)  முதல்  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ( 07.04.2024 )  வரை மேலும் பதினைந்து மாதங்கள்  நீட்டிக்கப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  அதன்படி,

“மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

 போக்குவரத்து  மாற்றம்

மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம்” என்று தெரிவிக்கப்படுள்ளது. அத்துடன்   வாகன ஓட்டுனர்கள் முறையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்  காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.