ஆறு, குளங்களாக மாறிய சென்னை சாலைகள்- படகு போல் மிதக்கும் வாகனங்கள்

 
ஹ்ஹ்

சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகள் எல்லாம் வெள்ளைக்காடாக மாறி இருக்கின்றன.  பல பகுதிகள் ஆறு மற்றும் குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன.  

ஹ்ர்

 முழங்கால் அளவுக்கு மேல்  தண்ணீர் இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது.  இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக மூழ்கி விடுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.  

ர்ர்ஹ்

 பெரும்பாலான சாலைகள் குளம் போல் இருப்பதால் மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.   இந்த மலையின் நீரில் சென்று பாதி தூரத்திற்கு மேல் செல்ல முடியாமல் வாகனங்கள் பழுதடைந்து பலரும் வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்கின்றனர்.  சிலர் தள்ள முடியாமல் அப்பகுதியிலேயே ஓரமாக நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

ப்

 சென்னை வியாசர்பாடியில் சுரங்க பாதை வழியாக நேற்று பேருந்து சென்ற போது அங்கு  ஆறு போல் ஓடிய  மழை நீரை கடக்க முயன்ற போது பாதி தூரத்திற்கு மேல் செல்ல முடியாமல் பேருந்து சிக்கியது.   அந்த மாநகரப் பேருந்துக்குள்  25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

பு

 பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகள் கொண்டு அந்த 25 பயணிகளையும் மீட்டு உள்ளனர்.  மேலும் சென்னையில் பல்வேறு சுரங்கப்பாதைகளையும் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வ்

  நேற்றைக்கு சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.  தொடர் மழையினால் இன்றைக்கும் சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.