சென்னையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குதிரை பந்தயம் தொடக்கம்

 
horse race horse race

சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. இதேபோல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குதிரை போட்டி நடைபெறவுள்ளது. செட்டிநாடு இந்தியன் டர்ப் இன்விடேஷன் கோப்பை என்ற பெயரில் இரண்டு நாட்கள் நடைபெறும் குதிரை பந்தயத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூரு உள்ளிட்ட ஆறு நகரங்களை சேர்ந்த குதிரை பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர். 

horse race

வெற்றி பெறும் அணிக்கு ரூ.49.50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் 16 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியை சுமார் ஒரு லட்சம் பேர் கடுகளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குதிரை பந்தயத்திற்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது.