சென்னை பரபரப்பு - 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு

 
i

சென்னையில் 18 பேருக்கு ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக போலீசார் நடத்திய சோதனையில் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

 கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை ,நாகப்பட்டினம் ஆகிய  ஐந்து மாவட்டங்களில் 45 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ. ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் . 

ni

கார் வெடிப்பின் சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள்,  தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐ. எஸ். ஐ. எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

 மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் படி சென்னை நகர் முழுவதும் போலீசார் தனியாக சோதனை நடத்தி வருகின்றார்கள்.  என்.ஐ.ஏ சோதனை நடந்து வரும் நிலையில் தமிழக போலீசாரும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.   இந்த சோதனையில் ஐ. எஸ். ஐ. எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். 

 தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களில் பட்டியலை தமிழக போலீசார் தயார் செய்து வருகிறது.  இதற்காக நடந்த சோதனையில் தான் இந்த 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.