சென்னை ஓபன் டென்னிஸ் நிறைவு - தமிழ்நாடு மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது!!

 
mk stalin

சென்னை ஓபன் டென்னிஸ் நிறைவு தமிழ்நாட்டின்  மற்றொரு மைல்கல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ttn

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை நடைபெற்ற சென்னை ஓபன் டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் தமிழக அரசு ஒரு முக்கிய ஸ்பான்சராக இருந்தது. கடந்த 12ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் துவங்கிய நிலையில் நேற்று மாலை  இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இரட்டையர் பிரிவில் லூயிசா ஸ்ட்பானி , கேப்ரிலேயா டப்ரோவ்ஸ்கி இணை, ஆனா லின்கோவா நடிலா ஜலாமிட்ஸ் ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.

tn

இதில்  6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் ஆனா லின்கோவா - ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் ஜோடியை வீழ்த்தி, கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி -  லூயிசா ஸ்டெபானி ஜோடி  கோப்பையைக் கைப்பற்றியது. ஒற்றையர்  பிரிவின் இறுதிப் போட்டியில் 17 வயதான லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மக்டா லினெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.இப்போட்டியை கண்டுகளித்த முதல்வர் ஸ்டாலின் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையை வழங்கி சிறப்பித்தார். 
 


இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓபன் டென்னிஸ் நிறைவுடன் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தமிழ்நாடு மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது. தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்றவும், நமது இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் எங்களது முயற்சிகளை தொடர்ந்து விரிவுபடுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.