14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்..

 
Rain

தமிழகத்தில் 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் கனமழை பெய்யலாம். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 24, 25ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 26ம் தேதி முதல் மீண்டும் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

rain

ஜூலை 27ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யலாம். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.  சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain
 
இன்றும் நாளையும் தெற்கு ஆந்திரா, தமிழக கடலோர பகுதி, மத்திய மேற்கு, தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்றும் நாளையும் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என  என சென்னை வானிலை ஆய்வு மையம் .எச்சரிக்கை விடுத்துள்ளது.