சென்னையில் சே குவேராவின் மகள், பேத்தி

 
se

புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலைடா குவேரா,  பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் தமிழ்நாட்டில் வருகை புரிந்துள்ளார்கள்.    சென்னை வந்த அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.   பின்னர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்றார்கள். 

seg

 புரட்சியாளர் சேகுவேரா உலக அளவில் அதிக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.   அர்ஜென்டினாவில் பிறந்த சேகுவேரா கியூபாவில் ஏற்பட்ட புரட்சியின் மூலம் எல்லோராலும் அறியப்பட்டார்.   முதலாளித்துவ கொள்கைகளுக்கு  எதிரான கடும் போராட்டங்களை முன்னெடுத்தவர் சேகுவேரா.  கியூபாவின் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 

 சேகுவாராவின் மறைவுக்கு பின்னர் உலக நாடுகளில் முதலாளித்துவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் அவரது கொள்கைகளும் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்ற வருகின்றன.   இந்தியாவில் சேகுவேராவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர்.  சேகுவேராவின்  டீசர்ட் அணிந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.  சேகுவாரா குறித்த ஏராளமான புத்தகங்கள் தமிழ் மொழியிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

 இந்த நிலையில் சேகுவாராவின் மகள் அலைடா குவேரா,  சேகுவேராவின் பேத்தி எஸ்டெபானி குவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளார்கள்.   சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  முற்போக்கு இயக்கங்கள் சார்பாகவும் சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது .

c

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  முன்னாள் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,  கட்சியின் மூத்த நிர்வாகிகள் டி. கே. ரங்கராஜன்,  சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று சேகுவேராவின் மகள் மற்றும் பேத்திக்கு  பூங்கொத்து  கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  அதன் பின்னர் இருவரும்  நாளை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நிகழ்வில்  பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன்,  ‘’புரட்சியாளர் சே குவேராவின் மகள்‌  , பேத்தி‌ இருவரும் சென்னை விமான நிலையம்‌ வந்தனர்.‌ முற்போக்கு இயக்கங்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை  ராஜா அண்ணாமலை‌ மன்றத்தில் நடக்கவுள்ள நிகழ்வில் பங்கேற்கிறார்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.