வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்..

 
savukku


சவுக்கு சங்கருக்கு மற்ற 4 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் வெளியாவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர்,  நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  தாமாக முன்வந்து கிரிமினல் வழக்குபதிவு செய்து செப்டம்பர் 15ஆம் தேதி அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.  இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கர்...

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட சங்கரிடம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் வழங்கியது.  மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் அவர் ஜாமீனில் வெளி வரும் சூழல் நிலையவிய நிலையில்,  2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளுக்காக சவுக்கு சங்கரை சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.  குறிப்பாக  கடந்த 2020ஆம் ஆண்டு ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளிலும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக, அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதற்காக 2 வழக்குகளிலும், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 
 
அதனை தொடர்ந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை, 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளுக்கும்  எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்  தற்போது  ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், சிறை நடவடிக்கைகளுக்குப்  பிறகு சவுக்கு சங்கர் ஜாமீனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.