சதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசை - மலையேறும் நேரம் மாற்றம்; கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

 
sathuragiri

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. மாதந்தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் வீதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.   இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பொதுமக்கள் மலையேறும் நேரம் காலை 5 மணி முதல் மாலை 3 மணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால்  அறிவிக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள்வருகை தர மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

sathuragiri

பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை யை முன்னிட்டு வருகிற  26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் ஆடி அமாவாசை  பூஜை நடத்தப்படாமல் இருந்த நிலையில்,  2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.  தாணிப்பாறை அடிவாரப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரளான பகதர்கள் கோயிலுக்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!

 பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்க  அனுமதி  இல்லை.  இதனால் கோயிலுக்கு  அருகில் தற்காலிக  பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம்,  மருத்துவ வசதி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.