சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது

 
tn

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் திருவிழா தொடங்கியது.

tn

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் உற்சாகமாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.  ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் , ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களும் சிவபெருமாள் கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுகிறது.  இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது.  அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா உற்சவம் ஆனது கடந்த 28ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. தினந்தோறும் இறைவன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்து வந்தார்.

Chidambaram therottam
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது.  நடராஜர் ,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும்,  தனித்தனி தேர்களில் வீதிகளில் வலம் வருகின்றனர்.  இதனால்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.

நாளை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற உள்ளது . இதைத் தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறும்.  அத்துடன் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம்,  ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது. இந்த விழாவானது ஜனவரி 7ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலா உடன் முடிவடைகிறது.