திருக்கோகர்ணத்தில் தேர் விபத்து - 2 பேர் மீது வழக்குப்பதிவு!!

 
tn

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த  விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் காயம்..

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்ட  நிலையில் தேர் பவனி  தொடங்கிய சில மணி நேரத்தில் தேரின் முன் பக்கம் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.  இதனால் அங்கிருந்த பொது மக்கள் அங்கிருந்து அலறியடித்து  ஓடினர்.  இருப்பினும் தேருக்கு அருகில் நின்று இருந்தால் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், காயமடைந்தவர்களை  மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேரின் வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாக நிலையில் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் காயம்..

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில்  தேரை வழிநடத்திய திருகோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . அத்துடன் தேர் விபத்து நடந்த இடத்தை இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.