கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் ; ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் ராஜு நியமனம்!!

 
School Education

கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது  ஆனால் மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில்,  கடந்த 17ஆம் தேதி போராட்டத்தில் மிகப்பெரிய கலவரம் முடித்தது . இதில் போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் தீ வைத்து எரித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் -  போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டதில் போலீசார் காயமடைந்தனர். 

dpi

இந்த விவகாரத்தால் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் வருகிற 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை விதிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறையின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஆக இருந்த செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  புதிய எஸ்பியாக திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்த பகலவன் தற்போது கள்ளக்குறிச்சி எஸ்.பி. யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஜவன் குமார் ஜவத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

tn
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.