சென்னையில் 2 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

 
rain

சென்னையில் 2 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே கடல் பகுதியில் உருவான மழை மேகத்தால் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 3.5 செமீ. மீனம்பாக்கத்தில் 1.6 செம்மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்துவரும் நிலையில், அடுத்த 2 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடையுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. சென்னை அண்ணாநகரில் மாலை 5.30 மணி முதல் 6 மணிவரை 45மிமீ மழை பதிவாகியுள்ளது.அதாவது அண்ணாநகரில் 10 நிமிடத்தில் 21.1 மிமீ மழை பெய்துள்ளது.