அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

 
rain

நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவி வந்தது.  பின்னர் வட தமிழகம் நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வந்த நிலையில், நேற்றிரவு குறிந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.  

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியால் இன்றும், (23.11.2022) மற்றும்  நாளை  (24.11.2022) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படியே  சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது.  திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

  கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை..

இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.