சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

 
rain

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவ மழையினால் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.   இதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது .  இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பரவலாக பழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இன்று தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,திருவாரூர், கடலூர், விழுப்புரம், சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓடி இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட  4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.