அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

 
rr

 வடகிழக்கு பருவமழை ஆரம்பத்ததில் இருந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.   சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின்  மேல் நிலவுகின்ற கீழ் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

rr

 இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்,  கடலூர், திருவள்ளூர், சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை ,விருதுநகர், நெல்லை ,சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .

சென்னையில் இன்று காலையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.