தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

 
Rain

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள அசானி  புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசாவில் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நாளை அசானி  புயல் மையம் கொள்ளும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  டெல்டா மாவட்டங்கள் ,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,கடலூர் ,கோயம்புத்தூர் ,திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

rain

நாளை முதல் 12ஆம் தேதி வரை வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.