"12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு“ - சென்னை வானிலை மையம்

 
rain

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழக பகுதிகளில் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல் நீலகிரி ,கோவை, திருப்பூர், திண்டுக்கல் ,தென்காசி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகிற 17-ஆம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை ,திருப்பூர் ,திண்டுக்கல், மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

rain
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை  தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது  என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, மாவட்டங்களில் மழை பெய்யும். அதேபோல்  நீலகிரி, கோவை, திருப்பூர் ,தேனி ,கன்னியாகுமரி ,நெல்லை ,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று லட்சத்தீவு கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு  அரபிக் கடல் பகுதியில் கடல் பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.