சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது