அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!!

 
rain

அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த சில நாட்களில் அசானி  புயல் காரணமாக தமிழகத்தில் கோடை காலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர்.

Rain

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர் ,பெரம்பலூர் ,நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இந்நிலையில் இன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.