தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கப்படவுள்ளது - எல்.முருகன்

 
L.Murugan

நாடு முழுவதும் 24 ஆயிரம் கிராமங்களுக்கு 4ஜி இன்டர்நெட் வசதி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், இதில்  தமிழகத்தில் 534 கிராமங்கள் பயன்பெறும் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செஸ் தோன்றிய இடத்திலேயே சர்வதேச செஸ் போட்டி நடப்பது நமக்கு பெருமிகு தருணமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றது மைல்கல் ஆகும். பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அண்மையில் துவங்கி வைத்த பிரதமர் 2 மாதங்களில் மீண்டும் தமிழகம் வந்துள்ளார். பாரதி கண்ட புதுமை பெண்ணாக பழங்குடியினர் என்ற குக்கிராமத்தில் பிறந்த பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

l

தொடர்ந்து பேசிய எல்.முருகன், இந்தியா முழுவதும் 24 ஆயிரம் கிராமங்களுக்கு 4ஜி இன்டர்நெட் வசதி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 534 கிராமங்களில் 4ஜி வசதி கிடைக்கும். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களும் இண்டர்நெட் வசதி கிடைக்கும். தமிழ் திரைப்பட விருதுகள் பெற்றவர்க்கு நன்றி தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுவதன் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு நாம் புகழ் சேர்க்க வேண்டும். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.