காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 
கரையோர மக்கள்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்குட்பட்ட காவேரி கரையோர கிராமங்களில் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் எந்நேரமும் அணை நிரம்பி, அதன் உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட உள்ளது. அதன் காரணமாக பவானி வட்டத்திற்குட்பட்ட பவானி, வரத நல்லூர், சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, ஊராட்சிகோட்டை உள்ளிட்ட காவேரி கரையோர‌ கிராமங்களில் உள்ள மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பவானி வட்டாட்சியர்  முத்துகிருஷ்ணன் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார், மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்டது. தற்போதைய நிலவரப்படி மழை 87.31 அடியை எட்டி உள்ளது. எனவே நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அணைக்கு வரும் அனைத்து நீரையும் சேமிக்க முடியாத நிலையில் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது தற்பொழுது அணைக்கு 6,348 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 5400 கடன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 88 அடியை நெருங்கியவுடன் அணைக்கு வரும் மொத்த நீரும் உபரி நீராக வெளியேற்றப்படும். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது