ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு

 
jayalalitha

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கருவூலத்தில் உள்ள சேலைகள் செருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வீணாகி வருகிறது. ஆகையால் அதை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூரு ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

jayalalithaa

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், காலணிகள் மற்றும் சால்வைகள் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய மனுவில், 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யபட்ட போது 1996 ஆம் வருடம் அவரது வீட்டில் சோதனை செய்து 21 வகையான பல்வேறு பொருட்கள் மற்றும் சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட  தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 காலணிகள், 250 சால்வைகள் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நகரில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பொருட்களில் பட்டுசேலைகள், காலணிகள், சால்வை ஆகியவை அழியும் பொருட்களாக இருப்பதால், அதை பொது ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆர்டிஆர் ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி அனுப்பிய மனுவை வழக்காக ஏற்றுகொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தபோது, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த சேலை, காலணி, சால்வைகள் எந்த பயன்பாடுகள் இல்லாமல் நாசமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது வீணாகினால்ல் தேசிய பொருளாதார இழப்பமாகும். அதை தவிர்க்க ஏலம் விட வேண்டும் என்றார். கருவூலத்தில் உள்ள பொருட்கள் பழையதாக இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு என பெரும் ரசிகர்கள் உள்ளதால் ஆர்வமாக இந்த பொருட்களை நிச்சயம் வாங்கிக் கொள்வார்கள் ஆகையால் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார். இவ்வழக்கில் நரசிம்மமூர்த்தி தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்புக்கு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.