கே.எஸ்.அழகிரி உட்பட 1000 பேர் மீது வழக்குப்பதிவு - எழும்பூர் போலீசார் அதிரடி

 
Ks Azhagiri

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட ஆயித்திற்கும் மேற்பட்டவர்கள் மீது எழுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் திங்கள் கிழமை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல், சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ks

  இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய கே.எஸ். அழகிரி உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில்  விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எம்.எல்.ஏ,க்கள் செல்வ பெருந்தகை, ரூபி மனோகரன், பிரின்ஸ், ராஜேஷ் குமார் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்பட 1000 பேர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.