ஓபிஎஸ் உள்பட 300 பேர் மீது பாயும் வழக்கு

 
oஒ

ஓபிஎஸ் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.   ஆலோசனைக்கு பின்னர் உயர் அதிகாரிகளின் அறிவுரைக்கு ஏற்ப போலீசாரின் நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. 

 அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வாநகரத்தில் கடந்த 11ஆம் தேதி அன்று நடந்தது.  அப்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.   எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சை உள்ளே விடாதபடி கதவை பூட்டிக்கொண்டு வெளியே காவலுக்கு நின்றனர்.   

ஓஒ

இதனால் ஓபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது . அப்போ கதவை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து ஆலோசனை நடத்தினர்.   இதன் பின்னர் நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.  வருவாய்த்துறையினர் அதிமுகவின் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

 இதை அடுத்து அதிமுகவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பொருட்கள், பீரோக்கள் ,கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள என்றும்,  ஆவணங்களையும் பொருட்களையும்  ஓபிஎஸ் தலைமையில் வந்தவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள் என்றும் எடப்பாடி தரப்பினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் அசல் பத்திரம் ஆவணங்களை ஓபிஎஸ் தலைமையில் வந்தவர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள் என்று ராயப்பேட்டை போலீசில்  அதிமுக எம் பி சிவி சண்முகம் புகார் அளித்திருக்கிறார்.   ஆவணங்கள் மாயமாகி இருப்பதாக வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்து இருக்கிறார்.

 அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக வந்திருக்கும் புகார் மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியது நிர்ப்பந்தம் ராயப்பேட்டை போலீசாருக்கு ஏற்பட்டிருக்கிறது .  ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.  ஓபிஎஸ் தரப்பினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.   ஆலோசனைக்கு பின்னர் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்விக்கு நிச்சயம் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் கசிகிறது.  10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.