நடிகை புகார்- முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாய் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

 
manikandan

இராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது  நடிகை சாந்தினி பாலியல் புகார் கூறியிருந்தார். இதன்படி,  முன்னாள் அமைச்சரின் தாயார் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணிகண்டன் தரப்பு புகாரில் நடிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 'மாஜி'யின் தாய் உட்பட 6 பேர் மீது  நடிகையின் புகாரில் வழக்கு பதிவு

மணிகண்டன் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக சென்னை சேர்ந்த நடிகை சாந்தினி புகார் கூறி இருந்தார். இந்த வழக்கில் மணிகண்டன் விடுதலையானார். இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு நடிகை சாந்தினி சென்றுள்ளா. அப்போது அவரது அம்மா உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நடிகை சாந்தினியை தாக்கினர். இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பதிவு பிரிவுகூடுதல் காவல் துறை இயக்குனரிடம் சாந்தினி புகார் அளித்தார்

இந்தபுகாரின் பேரில்,மணிகண்டன் தாயார் அன்னக்கிளி, உறவினர்கள் ரகுபதி, ஜெய வீர் குரு, விக்னேஷ், ராஜா, சென்னை சேர்ந்த ராமநாதன் ஆகியோர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் வீட்டில் வேலை செய்யும் ஜெயவீர் ராஜகுரு புகாரின் அடிப்படையில் சாந்தியின் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.