அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து

 
se

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.   கொரோனா  கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்திருக்கிறது.

h

 மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020 ஆம் ஆண்டில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது.  கரூர் மாவட்டத்தில் நடந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் செந்தில் பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்டார் என்று கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   இது குறித்து வழக்கு பதிவானது.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து செந்தில்பாலாஜி அமைச்சர் ஆனார்.  அவர் மீது தொடரப்பட்ட  இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.   ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டது.  விதிகள் மீறப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

 அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.  விசாரணைக்கு பின்னர்,   கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.