"கோடை காலம் முடியும் வரை..." - அமைச்சர் சொன்ன அட்வைஸ்!!

 
tn

வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது . கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

tn

அப்போது பேசிய அவர் , "கோடை காலம் முடியும் வரை மக்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை வெளியில் எடுத்துச் செல்வது நல்லது.  தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீரை அதிகமாகவும் தண்ணியை குறைவாகவும் எடுங்கள்.  வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.  அவசியமில்லாமல் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் . முழு உடலையும் மூடும் வகையில் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

tn

தலையில் துண்டு, தொப்பி,  துணி உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு மறைத்துக் கொள்ளுங்கள்.  கால்களில் செருப்பில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். காற்றோட்ட  வீடுகளில் தங்கி இருப்பது அவசியம்.  முடிந்தவரை எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளை பகிருங்கள். தேநீர், காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.  புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து பழைய உணவுகளை உட்கொள்ளக்கூடாது . வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது குழந்தைகளை ஏற்றக்கூடாது.  கோடை வெப்பத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. உடல் பாதிப்பு என்றால் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும் " என்றார்.