ஓ.பி.எஸ் ஆதரவாளரிடம் 50 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு ஓடிய கார் ஒட்டுநர் கைது

 
கார் ஓட்டுநர் ஸ்ரீதர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் இங்கு குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறார் . இவர் ஓ.பி.எஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர். மேலும் ஓ.பி.எஸ் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் தேனி மாவட்ட அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

periyakulam admk member 50 lakhs theft, 50 லட்சத்தோடு எஸ்கேப்பான அதிமுக  பிரமுகரின் டிரைவர் - வேறு விதமாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு - theni  periyakulam admk persons money ...

இவரின் கார் ஒட்டுநராக தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வருபவர்.இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் மற்றும் ஸ்ரீதர் காரில் நாராயணனின் நெருங்கிய நண்பர்  ஒருவருடன் 50 லட்சம் பணத்துடன் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில்  ஆண்டிபட்டியில் நாராயணன் தனது காரை விட்டு இறங்கி வேறு காரில் ஏறிவிட்டு, பின்னர் தனது ஒட்டுநர் ஸ்ரீதரிடம் காரில் உள்ள 50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறி விட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகானின் காரில் பெரியகுளம் நோக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் காரை நாராயணன் வீட்டில் நிறுத்திய ஸ்ரீதர் நாராயணன் வீட்டில் ஒப்படைக்க கூறிய 50 லட்சம் பணத்துடன் தப்பி ஒடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் பல இடங்களில் தேடி பாரத்தும் ஸ்ரீதரை கண்டுபிடிக்க முடியாததினால் பின்னர் நாராயணன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனது கணவர் கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவரது செல்போன் அனைத்து வைக்கபட்டிருக்கிறது என்றும், எனவே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எனவே தனது கனவர் ஸ்ரீதரை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீதரின் மனவி கெங்கம்மாள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரை பெற்று கொண்ட வடகரை காவல்துறையினர் புகாரை பெற்று கொண்டு வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரை தேடி வந்த நிலையில், அதிமுக பிரமுகர் நாராயணனின் 50 லட்சம் ரூபாய் உடன் தலைமறைவான ஓட்டுனர் ஸ்ரீதரை தென்காசி பகுதியில் இருந்து காவல்துறையினர் கைது செய்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் கொண்டுவந்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 50 லட்ச ரூபாயில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டும் அவரிடம் இருந்ததாகவும் மீதமுள்ள 47.50 இலட்சம் ரூபாய் அவருடைய உறவினரிடம் கொடுத்து வைத்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுவரை அவரிடம் இருந்து 15 லட்ச ரூபாய் வரை பணம் கைப்பற்றியதாகவும் மேலும் அவர் பல வீடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியதை அடுத்து அவர் எந்தெந்த வீடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.