குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய இளைஞர்; இரண்டு பெண்கள் உயிரிழப்பு

 
car

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் கார் மோதியதில் இரண்டு பெண் மென்  பொருள் பொறியாளர்கள் உயிரிழந்தனர். 

death

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீலஷ்மி(23), ஆந்திராமாநிலம் திருப்பதியை சேர்ந்த வாவண்யா(23) இருவரும் சென்னையில் தங்கி நாவலூரில் உள்ள எச்.சி.எல் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று பணி முடிந்து இரவு 11.30 மணியளவில் ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் நடந்துவந்த நிலையில் சாலையை கடந்துள்ளனர். அப்போது சென்னையை நோக்கி மோதிஷ்குமார்(20) என்பவர் அதிவேகமாக வந்த நிலையில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்ட சக வாகன ஓட்டிகள் அவசர ஊர்தி மூலம் ராயபேட்டை அரசு மருத்திவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

death

இதில் ஸ்ரீலஷ்மி வழியிலே உயிரிழந்தாக மருத்துவர்கள் உறுதி செய்தனர், லாவண்யாக்கு சிக்கிசை அளிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். இதனால் கார் ஓட்டி சென்ற மோதிஷ்குமார் கைது செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவர் மதுபோதையில் இருந்தற்குகான சான்றிதழ் பெற்று மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.