முடிஞ்சா தொட்டுப்பாருடா...கனல் கண்ணனுக்கு திகவினர் சவால்

 
க்

ஸ்ரீரங்கத்தின் கோயில் எதிரே இருக்கும் பெரியார் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசிய கனல் கண்ணனின் பேச்சு திராவிடர் கழகத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  முடிஞ்சா தொட்டுப் பாருடா என்று அவர்கள் சவால் விடுத்து வருகிறார்கள்.

ப்

இந்து முன்னணியின் சார்பில் நடந்த இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் கடந்த ஜூலை  31ஆம் தேதி உடன் முடிவடைந்தது.   இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் என்ற தலைப்பில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடந்து வந்தது.  கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் இந்த பிரச்சார பயணம் நிறைவடைந்தது.   இதை முன்னிட்டு சென்னை மதுரை வாயலில் பிரச்சாரப் பயணம் பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது.

க்க்

 இந்த கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கடல் கண்ணன் பங்கேற்று பேசினார் .  அப்போது  அவர்,  ’’இன்று இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா என்று சொல்கிறார்கள் .  உண்மை அதுவல்ல இன்று தான் தொடக்க விழா.  எப்படி சொல்கிறேன் என்றால் சீரங்கநாதனை கும்பிடுவதற்காக ஸ்ரீரங்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கோயிலுக்கு போய் வருகிறார்கள்.  ஆனால் அந்த கோவிலுக்கு எதிரே கடவுள் இல்லை என்று  சொன்னவரின் சிலை இருக்கிறது.  அது என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் நம் இந்துக்களின் எழுச்சி நாள்’’ என்று சொன்னார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இ

மத மத வெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கும் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் . உடைக்க சொல்லி இருக்கும் இந்த நடிகரை கைது செய்யுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரம் கனல்  கண்ணனுக்கும், முஞ்சா தொட்டுப்பாருடா? சவால் விடுத்து வருகின்றனர்.  பெரியார்  மறைந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  ஆனால் இன்னமும் அவரது சிலையை பார்த்து சங்கிகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.   முடிந்தால் தொட்டுப்பார் என்று கடல் கண்ணனுக்கு சவால் விடுத்து வருகிறார்கள்.   முடிந்தால் இதே போல் ஒரு மேடை போட்டு எந்த தேதி எந்த நேரம் பெரியார் சிலையை உடைக்க போகிறேன் என்று அறிவித்துவிட்டு செய் என்று என எச்சரிக்கை விடுத்தும் வருகிறார்கள்.