அவ்வளவு பெரிய பேனாவுக்கு இங்க் போடுவாங்களா? இங்க் எப்படி போடுவாங்க?

 
p

அவ்வளவு பெரிய பேனாவுக்கு இங்க் போடுவாங்களா? என்று கேட்கும் சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பதில்.  அந்த பேனாவில் வந்த இங்க் வாயிலாகத் தான் இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் சிலரால் கதற மட்டும் முடிகிறது என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு.

 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே அமைந்துள்ளது. அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதியின் சமாதியில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  அதன் மாதிரி படத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். 

mks

 உதயசூரியன் வடிவில் கருணாநிதியின் நினைவிடமும் அவரின் நினைவாக பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இருக்கின்றது.  இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் கூடுதலாக நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட  பேனா நினைவுச் சின்னம் ஒன்றையும் 134 அடி உயரத்திற்கு அந்த நினைவு துணை அமைக்கவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்தது.

 இந்த தகவல் வெளிவந்ததுமே நாம் தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சி, பாஜக போன்ற பல்வேறு கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.   இது ஒரு புறம் இருக்க,   அவ்வளவு பெரிய பேனாவுக்கு இங்க் போடுவாங்களா? இங்க் எப்படி போட முடியும்? பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என். வி என். சோமு பதிலடி கொடுத்துள்ளார் . 

அவர்,   அவ்வளவு பெரிய பேனாவுக்கு இங்க் போடுவாங்களா? என்று கேட்கும் சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பதில்.  அந்த பேனாவில் வந்த இங்க் வாயிலாகத் தான் இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் சிலரால் கதற மற்றும் முடிகிறது என்கிறார்.