ஓய்வு அறையில் கேமரா! அழகுகடை பெண்களை ரசித்த ஓனருக்கு அடி உதை

 
f

 ஓய்வு அறையில் கேமரா வைத்து கடையில் வேலை செய்யும் பெண்களை ரசித்து வந்த கடையின் ஓனர் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கப்பட்டிருக்கிறார். பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் உறவினர்கள் திரண்டு வந்து அடித்து உதைத்தனர்.  

 சேலத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை இயங்கி வருகிறது.   புதிய பேருந்து நிலையம் அருகே வீரபாண்டியார் நகரில் இந்த அழகு சாதன பொருட்கள் விற்பனைக் கடையை நடத்தி வருபவர் ஜெயின் ஹித்தீஸ்.   இந்த கடையில் 6 பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

 கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த சுமதி என்பவருக்கு கடையின் உரிமையாளர் ஜெயின் ஹித்தீஸ் பாலியல் தொந்தரவு அளித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடையில் உள்ள ஓய்வு அறையில் கேமரா பொருத்தி வேலை செய்யும் பெண்களை ரசித்து வந்திருக்கிறார். இதுகுறித்து குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

po

 இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உறவினர்கள் நேற்றைக்கு கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளர்களை  சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.  உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். 

 பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஜெகதீஷ் ஹித்தேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

கடையின் மேலாளராக பணிபுரிந்து பெண்ணுக்கும் அதே கடையில் பணிபுரிந்து வந்த கோமதிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் இதனால் கடை உரிமையாளர் ஜெகதீஷ் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,  இந்த நிலையில்தான் பாலியல் புகார் கூறப்பட்டிருக்கிறது என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேற்கொண்டு பாலியல் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடையில் புகுந்து தாக்குதல் நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.