நயன்தாரா எப்படி குழந்தை பெற்றார்? என்பதிலே அரசுக்கு கவனம்- சிவி சண்முகம்

 
CV Shanmugam

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அரசு கவனம் செலுத்தாமல் நயன்தாரா எப்படி குழந்தை பெற்றார்? என்பதிலேயே கவனம் செலுத்திவருவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சாடியுள்ளார்.

AIADMK ex-minister C Ve Shanmugam arrested in Villupuram

விழுப்புரம் மாவட்டம் அகூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய உறுதி வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “திமுக ஆட்சிக்குவரும்போதெல்லாம் தீவிரவாதம் தலைதூக்குகிறது. அதற்கு கோவை வெடிகுண்டு சம்பவமே எடுத்துக்காட்டு. அந்த சம்பவத்தில் மக்களின் அச்சத்தை போக்காமல் திமுக அரசியல் செய்துகொண்டிருக்கிறது. இது செயல்படாத அரசு, திறமையற்ற அரசு. இந்த விவகாரத்தில் செயல்படாத முதலமைச்சர் வாய்த்திறக்க மறுக்கிறார். சட்டத்திற்குட்பட்டு நயன்தாரா குழந்தை பெற்றுக்கொண்டாரா என்பதை கண்டுபிடிப்பதில் தான் திமுக அரசு கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.