CUET நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

 
cuet

 

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு  தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விண்ணப்ப செயல்முறையை மீண்டும் தொடங்கியுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே வாய்ப்பாக இந்த நுழைவுத் தேர்வு இருப்பதால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்வதற்கும், விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் வரும் 24ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, இணையதள முகவரி  மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

jee exam

ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய தேதிகளிலும், ஆகஸ்ட் மாதம் 4,5,6,7,8,10 ஆகிய  நாட்களிலும் கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள  மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படவுள்ளது. தற்போது வரை தேர்வுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 43 மத்திய பல்கலைக்கழகங்கள் 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம்  86 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது நுழைவத் தேர்வின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது