விளையாட்டு வீரர்களுக்கு விருது & ரூ.16.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 
tn

விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருது மற்றும் ரூ.16.30 இலட்சம் ஊக்கத்தொகை - தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.28 கோடி உயரிய ஊக்கத்தொகை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (12.9.2022) சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதினையும், அதற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

tn

சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் வென்றதற்காக 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், 4 பயிற்றுநர்கள், 4 உடற்பயிற்சி இயக்குநர்கள் / உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் 3 நடுவர்கள், என மொத்தம் 19 நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகளையும், விருதிற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்கள். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை கடந்த 2019-2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 65-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் பதக்கங்கள் வென்ற 659 மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 7 கோடியே 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 2019-2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜுனியர், ஜுனியர், இளையோருர் மற்றும் சீனியர் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 291 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 5 கோடியே 93 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;கடந்த 6.4.2022 முதல் 17.4.2022 வரை மத்திய பிரதேசத்தில், போபால் நகரில் நடைபெற்ற 12-வது தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் குழுப்போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 18 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை 27 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 23.10.2019 முதல் 27.10.2019 வரை தென் கொரியாவில், சுங்ஜுவில் நடைபெற்ற ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற திரு. லட்சுமணன் ரோஹித் மரடப்பா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை;
கடந்த 19.3.2021 முதல் 21.3.2021 வரை உத்தரகாண்டில் நடைபெற்ற பெண்களுக்கான 31-வது தேசிய அளவிலான சீனியர் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் குழுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 4 விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

stalin

2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த  வி.எஸ். ராகுல் அவர்களுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை; கடந்த 4.11.2021 முதல் 13.11.2021 வரை கொலம்பியவில், இபாகு - டோலிமாவில் நடைபெற்ற இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங்  65 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம் மற்றும் திரு. ஆர். கார்த்திகேஸ்வர் அவர்கள் 85 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம், என மொத்தம் 3 நபர்களுக்கு ஊக்கத் தொகையாக 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 9.2.2020 முதல் 15.2.2020 வரை சென்னையில் நடைபெற்ற 77-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற செல்வி ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை; என மொத்தம் 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 1130 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.