பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

 
tn

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ttn

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ttn

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படும்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவில், கோயம்புத்தூர், வடிவேலம்பாளையத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் சமூக சேவகி திருமதி கமலாத்தாள் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து,  முதலமைச்சர்  சிறப்பு செய்தார்கள்.

tn

மேலும், தமிழ்நாட்டின் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டங்களின் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை அரிய ஆவணங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள "ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி' என்ற சிறப்பு மலரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட, சமூகசேவகி திருமதி கமலாத்தாள் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். முன்னதாக  முதலமைச்சர்  மதுரை, நெல்பேட்டையில் மைய சமையல் கூடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.