தேவநேயப் பாவாணர் பேத்தி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
stalin

'திரவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் முதுகு தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிபூரணம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய திரவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் அவர்கள் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்.அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார், மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.